தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்: 5வது நாளாக நீடிப்பு

புழல்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் புழல் 23வது வார்டில் 23 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றுகின்றனர். கடந்த 27ம் தேதி காலை 6 மணிக்கு வழக்கம்போல் அனைத்து தூய்மை பணியாளர்களும் பணிக்கு வந்து கையெழுத்திட சென்றனர். அப்போது, “நீங்கள் யாரும் கையெத்திட வேண்டாம். உங்கள் ஆதார் கார்டு புதிதாக விண்ணப்பம் அளிக்க வேண்டும் என வார்டு சுகாதார ஆய்வாளர் சபரிராஜ் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். அதற்கு ஊழியர்கள், “முதலில் நாங்கள் வருகை தந்ததற்கு கையெழுத்துப் போடுகிறோம்” என கூறியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அதிகாரி கையெழுத்து போடும் பதிவு நோட்டு புத்தகத்தை எடுத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லாமல் 4 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று மீண்டும் பணிக்கு வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்திட சென்றனர். அதில் சிலரின் பெயர்கள் பட்டியலில் இல்லை. இதனால், ஆத்திரமடைந்தவர்கள் 5வது நாளாக நேற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: