எஸ்.பி. துவக்கி வைத்தார் அரசு அருங்காட்சியகத்தில் உலக வனஉயிரி தினவிழா

கரூர், மார்ச். 4: கரூர் அரசு அருங்காட்சியத்தில் உலக வன உயிரி தின விழா நடைபெற்றது. அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு காப்பாளர் மணிமுத்து வரவேற்றார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு தலைமை வகித்தார். வனச்சரகர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு, அரசு கலைக் கல்லூரியில விலங்கியல் மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட, ஒவியப்போட்டி மற்றும் புகைப்பட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். கல்லூரி விலங்கியல்துறை பேராசிரியர் கார்த்திகேயன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசினர். இளநிலை உதவியாளர் கந்தசாமி நன்றி கூறினார்.

Related Stories:

>