மதுரையில் இருந்து கோவை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு முன்பதிவு இல்லாத அந்தியோதயா ரயில்கள் இயக்க வேண்டும்

 

மதுரை, மே 25: சென்னை தாம்பரம்- நாகர்கோவில் இடையே அந்தியோதயா ரயில் இயக்கப்படுகிறது. முன்பதிவு இல்லாத இந்த ரயிலில் வியாபாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் கேரளா மாநிலத்திற்கு செல்லும் நபர்கள் இந்த ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். முன்பதிவு இல்லாத ரயில் என்பதால் பலருக்கு பயன்படுகிறது. மேலும் இந்த ரயில் நெல்லை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், செங்கல்பட்டு என தாம்பரம் சென்றடைகிறது. தென்மாட்டங்களில் இருந்து பல ரயில்கள் சென்னை சென்றாலும், இதற்கு என மக்கள் மத்தியில் தனி இடம் பெற்றுள்ளது. இதுபோல மதுரையை மையமாக கொண்டு கோவை, சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: