மாநகராட்சியில் இன்று மக்கள் குறை தீர் கூட்டம்

 

கோவை, மே 26: கோவை மாநகராட்சியில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி, மின் வசதி, பிறப்பு, இறப்பு சான்றிதழ், சொத்து வரி, காலியிட வரி உள்ளிட்ட பல்வேறு தேவைகள், குறைகள் சம்பந்தமான மனுக்களை அளித்து வருகின்றனர். இதேபோல், இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் எனவும், துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கேட்டு கொண்டுள்ளார்.

Related Stories: