க.க.சாவடி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

 

கோவை, மே 25: கோவை குனியமுத்தூர் மின்பகிர்மான வட்டம், தெற்கு செயற் பொறியாளர் (பொ) சென்ராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குனியமுத்தூர் கோட்டத்திற்குட்பட்ட க.க.சாவடி துணை மின் நிலையத்தில் இன்று (26ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் க.க.சாவடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட முருகன்பதி, வீரப்பனூர், சாவடிபுதூர், ஏ.ஜி.பதி, நவக்கரை, குமிட்டீபதி, அய்யன்பதி, திருமலையாம்பாளையம், பிச்சனூர், ரங்காசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: