கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் பலி

 

மதுரை, மே 25: மதுரை அருகே கோவில் பாப்பாக்குடி சிக்கந்தர் சாவடியை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன் (37). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று கோச்சடையில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த செந்தமிழ் செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மாடக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: