திண்டுக்கல்லில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

திண்டுக்கல், மார்ச் 3: தமிழகத்தில் ஏப். 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தினத்தன்று பொதுமக்கள் மத்தியில் எந்த பாதிப்புமின்றி அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும் என்றும், எவ்வித அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என உணர்வினை ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல்லில் நேற்று மும்பையில் இருந்து வந்த துணை ராணுவத்தினர், மாவட்ட ஆயுதப்படை போலீசார் சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.  மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகம் அருகே இருந்து துவங்கிய கொடி அணிவகுப்பு  பெரியார் சிலை, மெயின்ரோடு, பெரியகடை விதி,  ஆர் வி நகர், என முக்கிய வீதிகள் வழியாக சென்று தெற்கு காவல் நிலையத்தை அடைந்தது. முன்னதாக கொடி அணிவகுப்பை எஸ்பி ரவளிபிரியா துவக்கி வைத்தார்.

Related Stories:

>