சருமப் பாதுகாப்புக்கு சன்ஸ்க்ரீன் அவசியமா?

நன்றி குங்குமம் டாக்டர்

கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க இன்றியமையாத ஒன்றாக பலரும் நினைப்பது சன்ஸ்கிரீன்தான். கோடைகாலத்தில் சரும பாதுகாப்புக்கு சன்ஸ்கிரீன் அவசியம் தானா என்பதையும் சன்ஸ்கிரீனின் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வோம். மேலும், சன்ஸ்கிரீன் எவ்வளவு நேரம் நீடிக்கும் மற்றும் சன்ஸ்கிரீனை எப்படி பயன்படுத்த வேண்டும், எப்போதெல்லாம் பயன்படுத்த வேண்டும் போன்றவற்றை தெரிந்து கொள்வோம்.

இது சருமத்தைப் பாதிக்கும் புறஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. நம்மில் பலரும் சன்ஸ்கிரீன் லோஷனை கோடை காலத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது அப்படி அல்ல. நமது சரும ஆரோக்கியத்தை பேணிக்காப்பதற்கு அனைத்து காலநிலைகளுக்கு ஏற்ப நாம் சன்ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்தலாம்.

நல்ல தரமான சன்ஸ்க்ரீன் லோஷன்கள் நமது சருமத்தில் ஆழமாக ஊடுருவி, சருமத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. சன்ஸ்கிரீன் லோஷனை தொடர்ந்து பயன்படுத்தும்போது முன்கூட்டியே முதுமை ஆவது போன்ற தோற்றத்தை தடுக்க உதவுகிறது. எனவே வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல் எல்லா காலகட்டங்களிலும் சன்ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்துவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

சன்ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்துவதன் மூலம் நமது சருமத்தை இது போன்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க முடியும். மேலும் நமது சருமத்தில் கொலாஜன் அளவை பராமரிக்கவும் உதவுகிறது. இதனால் சருமத்தில் ஏற்படும் சேதங்கள் தடுக்கப்படுகிறது. சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் ஏற்படாமல் தடுக்க இது உதவுகிறது. சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் தரமான சன்ஸ்கிரீன் லோஷனை தினசரி பயன்படுத்த வேண்டும். இதற்கு வருடத்தின் எல்லா நாட்களிலும் கதிர்வீச்சுக்கள் நமது சருமத்தை பாதிக்கின்றன. இதற்கு வெயில் காலம் குளிர் காலம் என்ற கணக்கெல்லாம் கிடையாது.

ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் செறிவூட்டப்பட்ட சன்ஸ்கிரீன் லோஷன்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க உதவுகிறது. சருமத்தில் ஆக்ஸினேற்ற அழுத்தம் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. இளமையிலேயே முதுமையானது போன்ற தோற்றத்தை தடுக்கவும் உதவுகிறது. எனவே அனைத்து பருவங்களிலும் சன்ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்துவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

பல்வேறு சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாக இது உள்ளது. சருமத்தில் வறட்சி ஏற்படாமல் தடுக்கவும், சருமத்தில் கோடுகள், வரிகள் ஏற்படாமல் தடுக்கவும் இது உதவுகிறது. சூரிய ஒளியால் ஏற்படும் நிற மாற்றத்தை தடுத்து சரும ஆரோக்கியத்தை பேணிக்காக்கிறது. எனவே தினசரி சன்ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்துவது அத்தியாவசியம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் இதை பயன்படுத்தலாம்.

நாம் எந்த ஒரு பொருளை சருமத்திற்கு பயன்படுத்துகிறோம் என்றாலும் அது தரமானதா என்பதனை முதலில் சோதித்து பின்னர் வாங்க வேண்டும். சந்தைகளில் கிடைக்கக்கூடிய மலிவு விலை பொருட்களை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். இயற்கையாக தயாரிக்க கூடிய சன் ஸ்கிரீன் லோஷன்கள் சருமத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. சன்ஸ்கிரீன் லோஷன்களை பயன்படுத்தும்போது உங்களுக்கு ஒவ்வாமைகள் இருந்தால் அதனை தவிர்த்து வேறு சன்ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்தலாம். உங்கள் சருமத்தின் தன்மைக்கு ஏற்ப இந்த லோஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

சன்ஸ்கிரீனைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான முக்கிய வழிமுறைகள்

சரியான நேரம்: சூரிய ஒளியில் செல்வதற்கு 15-30 நிமிடங்களுக்கு முன்பே பூச வேண்டும், அப்போதுதான் அது சருமத்தில் உறிஞ்சப்படும்.

அளவு: முகத்திற்கு ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு விரல் நீளத்திற்கு சன்ஸ்கிரீனை எடுத்துப் பயன்படுத்த வேண்டும்

பயன்படுத்தும் முறை: சன்ஸ்கிரீனை முழுமையாகத் தேய்க்காமல், புள்ளிகளாக வைத்து மெதுவாகத் தட்டிப் பரப்பவும்.

மறக்கக்கூடாத இடங்கள்: காதுகள், கழுத்து, உதடுகள் மற்றும் கைகளின் பின்புறம் ஆகிய இடங்களிலும் பயன்படுத்தவும்.

மீண்டும் பூசுதல்: ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கும் அல்லது நீச்சல், அதிக வியர்வைக்குப் பிறகு கட்டாயம் மீண்டும் பூச வேண்டும்

மேக்கப் போடும் முன்: மேக்கப் போடுவதற்கு 5-10 நிமிடங்களுக்கு முன் சன்ஸ்கிரீன் போட்டு, அது காய்ந்த பிறகு மேக்கப் போடலாம்.

முக்கிய குறிப்புகள்: SPF 30+ 30 அல்லது அதற்கு மேற்பட்ட SPF கொண்ட ‘Broad Spectrum’ சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தலாம். முகத்திற்கு தனியாக: முகம் மற்றும் உடலுக்குத் தனித்தனி சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது, சரும எரிச்சலைத் தவிர்க்க உதவும். மேகமூட்டமான நாட்களிலும்: வெயில் இல்லையென்றாலும் கூட சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது தான்.

தொகுப்பு:- தவநிதி

 

Related Stories: