கோடை வியர்க்குருவை விரட்ட எளிய வழிகள்

கோடை காலத்தில் ஏற்படும் வெப்பத்தால் சிலருக்கு வியர்க்குரு பாடாய்படுத்தும். உடலில் பித்தம் இருப்பவர்கள், உடல் பருமன், கொழுப்புச்சத்து, உடற் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு இது அதிகம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

*இறுக்கமான ஆடைகளை அணிவது போன்ற பழக்கங்களாலும் ஏற்படும்.

*வெள்ளரிக்காய், கிர்ணிப்பழம், இளநீர், தர்பூசணி, கரும்புச்சாறு அருந்தினாலும் உடலின் நீரிழிப்பை சரி செய்து வியர்க்குருவை போக்க உதவும்.

*இரவில் தூங்கச் செல்லுமுன் திரிபலா பொடியை சுடுநீரில் கலந்து பருகலாம். நீரில் கரைத்து தேய்த்தும் குளித்தாலும் வியர்க்குரு மறையும்.

*வெட்டிவேர் பவுடரையும் நீரில் கரைத்து வியர்க்குரு இடங்களில் தடவினால் மறையும்.

*அருகம்புல், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்தும் குளித்தால் மறையும்.

*நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அருகன் தைலம், தூர் வாரி தைலத்தை உடலில் தேய்த்துக் குளித்தால் வராது.

*பாசிப்பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்துக் குளிக்கலாம்.

*மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் சம அளவு எடுத்து மை போல அரைத்து வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்தால் சூடு குறையும். வியர்க்குரு வராது.

*கற்றாழை ஜெல்லை எடுத்து சோப்பு போல தேய்த்துக் குளித்தால் வியர்வை பிரச்னை, வியர்க்குருவும் வராது.

*நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

*பகலில் வெளியே செல்லும் போது குடைப்பிடித்துச் செல்லலாம். பருத்தி ஆடைகளை உடுத்தலாம்.

*நெல்லி நீர், நன்னாரி சர்பத், இளநீர்,எலுமிச்சை கலந்த சர்பத் குடிக்கலாம். இதனால் சூடு குறையும்.

தொகுப்பு: எஸ்.மாரிமுத்து, சென்னை.

Related Stories: