தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி தேவை கலெக்டர் தகவல்

திண்டுக்கல், மார்ச் 3: திண்டுக்கல் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசார விளம்பரம் செய்ய ஊடக, கண்காணிப்பு குழுவினரிடம் அனுமதி பெற வேண்டும் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து உள்ளூர் தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். கூட்டத்தில், ‘திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நாளிதழ்கள், உள்ளூர் தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள், எப்எம் ரேடியா போன்வற்றில் தேர்தல் சம்பந்தமான அரசியல் விளம்பரங்கள், கட்சி- சுயேச்சை வேட்பாளர்கள், பிரசார விளம்பரங்களை அனுமதியின்றி வெளியிடவும், ஒளிபரப்பவும் தேர்தல் ஆணையத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

விளம்ப செய்ய விரும்புவோர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊடக சான்று, கண்காணிப்பு குழுவினரிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதில் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ள வீடியோ தொகுப்பின் சிடி வழங்க வேண்டும். அதில் பதிவாகியுள்ள காட்சிகளை ஊடக கண்காணிப்பு குழுவினர் பார்வையிட்டு விதிமீறல் உள்ளதா என செய்த பின் அனுமதி வழங்கப்படும். மேலும் அனைத்து நாளிதழ்கள்- உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் கண்காணிக்கப்படும். விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் அரசியல் கட்சிகள் நாளிதழ்களில் வெளியிடப்படும் விளம்பர மாதிரிகளை பரிசீலனைக்கு பின் ஆய்வு செய்து 24 மணிநேரத்திற்குள் அனுமதி வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.

Related Stories:

>