மின்கம்பத்தில் பைக் மோதி விபத்து

 

மதுரை, மே 23: மதுரை அருகே மின் கம்பத்தில் பைக் மோதி வாலிபர் சாவு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை கீரைத்துறையை சேர்ந்த பாலமுருகன்(22). இவர் தேனி மதுரை மெயின் ரோட்டில் பைக் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அவர் கே.புளியங்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரம் இருந்த மின்கம்பத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து செக்கானூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: