வேன் மோதி வாலிபர் சாவு

 

பேரையூர், மே 23: பேரையூர் தாலுகா, சேடபட்டி அருகே மங்கல்ரேவில் தனியார் ராணுவ அகாடாமி பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி பள்ளியில் இதே பகுதியிலுள்ள சலுப்பபட்டியைச் சேர்ந்த அழகு பெத்தனசாமி (24), பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் இவருடன் பயிலும் சக மாணவர்களுடன் பேரையூர்-உசிலம்பட்டி சாலையில் இடதுபுறமாக ஓடிக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த வேன் அழகு பெத்தனசாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பெத்தனசாமி, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக அழகு பெத்தனசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: