சர்வதேச சிலம்ப விளையாட்டு போட்டி: தங்கம் வென்ற 25 வீரர்கள் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து

 

சென்னை: சர்வதேச சிலம்ப விளையாட்டு போட்டியில், தங்கம் வென்ற 25 தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்தோ- நேபாள் சர்வதேச சிலம்பம் போட்டி நேபாளில் உள்ள ரங்கசாலா- போக்ரா என்ற இடத்தில் நடந்தது. இந்த போட்டியில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து சிலம்ப விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் கடந்த 10ம்தேதி நோபாளம் புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து அங்கு நடந்த சர்வதேச சிலம்ப விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பல நாடுகளை சேர்ந்த அணிகளுடன் மோதினர்.

இந்த விளையாட்டு போட்டியில் 29 தங்க பதக்கங்கள் மற்றும் ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தையும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் வென்றனர். இந்நிலையில், போட்டிகளில் வெற்றி பெற்று தங்கப் பதக்கங்களை பெற்ற 25 வீரர், வீராங்கனைகள் சென்னை மாவட்டம் அரும்பாக்கத்தை சேர்ந்த சிலம்பம் மாஸ்டர் ஆர்.கார்த்திக் தலைமையில் நேற்று அண்ணா அறிவாலயம் வந்தனர். அவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories: