சாரம் சரிந்து தொழிலாளி பலி

தேவதானப்பட்டி, மார்ச் 3: தேவதானப்பட்டி அருகே சாரம் சரிந்து கட்டிட தொழிலாளி உயிரிழந்தார்.  தென்காசி அருகே கடையத்தை  சேர்ந்தவர்கள் சுப்பிரமணி(39), வேலு(39),   முத்தையா(55),  செல்லத்துரை(25). இவர்கள் தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடம் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நேற்று முன்தினம்  மாலை வேலை செய்யும் போது சாரம் சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது.   இதில் நால்வரும் பலத்த காயமடைந்தனர்.  உடனடியாக அனைவரும்  தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். செல்லும் வழியில் வேலு இறந்துவிட்டார். மற்றவர்கள் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>