நாங்குநேரி, மானூரில் எல்லை பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு

நாங்குநேரி, மார்ச் 3:  நாங்குநேரி, மானூரில் எல்லை பாதுகாப்புப் படையினர் அணிவகுப்பு பயிற்சி மேற்கொண்டனர். தமிழக சட்டசபை வருகிற ஏப்.6ம்தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையொட்டி மத்திய பாதுகாப்பு படையினர் தமிழகமெங்கும் வந்துள்ளனர். நாங்குநேரியில் நேற்று எல்லை பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு ஒத்திகை மேற்கொண்டனர். நாங்குநேரி டிஎஸ்பி லிசா ஸ்டெபிலாதெரஸ் தலைமையில் 64 எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் அடங்கிய குழுவினர் தேர்தல் பாதுகாப்பு விழிப்புணர்வு அணிவகுப்பை மேற்கொண்டனர். இதில் நாங்குநேரி சப் இன்ஸ்பெக்டர் ரோச் அந்தோனிமைனர், தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவைச் சேர்ந்த 5 பேர் மற்றும் உள்ளூர் காவலர்களும் இதில் பங்கேற்றனர். நாங்குநேரியில் உள்ள முக்கிய தெருக்களில் எல்லை பாதுகாப்பு படையினர் பேரணியாக வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மானூர்: வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் மானூர் பஜாரில் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். இதில் எல்லை பாதுகாப்பு படை உதவி கமாண்டர் நரேந்திரசிங் கன்வர், தாழையூத்து டி.எஸ்.பி அர்ச்சனா, மானூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமர், பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மணி மகாத்மா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினரும் போலீசாரும் பங்கேற்றனர்.

Related Stories:

>