செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

 

நிலக்கோட்டை, மே 22: கொடைரோடு அருகே ஜெகநாதபுரத்தில் செல்வவிநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. கொடைரோடு அருகே உள்ள ஜெகநாதபுரத்தில் உள்ள செல்வவிநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் நேற்று முன்தினம் பல்வேறு புன்னிய நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் தாரை தப்பட்டை வானவேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பிரமாண்ட யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து கோபூஜை, நாடிசந்தானம், உயிரூட்டல் பூஜையைத் தொடர்ந்து கடம் புரப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் கலசத்தை மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து ராஜ கோபுர கலசத்திற்கு புனிதநீர் தெளித்து கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. அப்போது கருட பகவான் வானில் வட்டமிட்டதைக் கண்ட பக்தர்கள் செல்வ விநாயகரே போற்றி போற்றி என கோஷங்களை எழுப்பி வழிப்பட்டனர். இதனையடுத்து பக்த்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

Related Stories: