திருத்துறைப்பூண்டியில் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

 

திருத்துறைப்பூண்டி, மே 22: முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி 35வது நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பாக திருத்துறைப்பூண்டியில் காமராஜர் சிலை அருகே அமைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு நகர காங்கிரஸ் தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான எழிலரசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. வட்டாரத் தலைவர்கள் பாஸ்கர், தியாகராஜன், முன்னாள் வட்டாரத் தலைவர் சங்கர வடிவேலு முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட துணைத் தலைவர்கள் பழனியப்பன், கோவிந்தராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் பாலன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், ஸ்டீபன் செல்வகுமார், மாவட்ட செயலாளர் தண்டபாணி நகர் மன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நகர பொறுப்பாளர்கள் சண்முகம், ஸ்டாலின், ஞானசேகரன், அம்பேத்கர், அண்ணாதுரை, வட்டார செயலாளர் முருகானந்தம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராம்குமார் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் விஜயராணி, ஜெயந்தி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: