மாசி பெருவிழாவை முன்னிட்டு அங்காளம்மன் கோயிலில் தேர் செய்யும் பணி தீவிரம்

மேல்மலையனூர், மார்ச் 3: மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் சிறப்பு பெற்ற திருத்தலம் ஆகும். இங்கு அமாவாசை தினத்தில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்திற்கு  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில், இக்கோயிலின் சிறப்புமிக்க மாசி பெருவிழா வருகிற 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 13 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த விழாவில் மயானக் கொள்ளை, திருத்தேர் வடம் பிடித்தல், தீமிதி விழா, அம்மன் வீதியுலா போன்ற  நிகழ்வுகள் இடம் பெறும்.

மாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வு தேர்திருவிழா ஆகும். சிவனுக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிய அங்காளம்மனை தேவர்கள், ரிஷிகள் தேராக உருவாகி அமரவைத்து திருக்கோயிலை சுற்றி வந்து அம்மனை சாந்தப்படுத்துவதாக ஐதீகம்.  இத்தகைய சிறப்பு பெற்ற  தேரினை வருடம் தோறும் புதிய பனைமரம் பூவரசமரம் போன்ற மரங்களை கொண்டு உருவாக்கி பிரமாண்ட தேர்திருவிழா நடைபெறும். இதற்காக புதிய தேர் செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது. கோயில் பூசாரிகள்  இதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>