சென்னை ராயபுரத்தில் நடுரோட்டில் கியாஸ் வேன் ஓட்டுநர் அடித்துக்கொலை!

 

சென்னை: சென்னை ராயபுரத்தில் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது கியாஸ் லோடு வேன் மோதியதால் ஏற்பட்ட தகராறில், கியாஸ் லோடு வேன் ஓட்டுநர் நடுரோட்டில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கல்லறை சாலை சந்திப்பில் நடந்த இவ்விபத்தின் போது, ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் (32) கடுமையாக மார்பில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே லோடு வேன் ஓட்டுநர் ரகு (42) உயிரிழந்தார்.

சென்னை ராயபுரத்தில் கியாஸ் வேன் ஓட்டுநர் ஒருவர் நடுரோட்டில் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிகண்டனை கைது செய்து ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: