புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி

மதுரை, மார்ச் 3: புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு நடத்த ஐகோர்ட் கிளை அனுமதித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே முள்ளிப்பட்டியை சேர்ந்த குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

எங்கள் ஊரிலுள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 9 கிராமங்கள் சார்பில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று(மார்ச் 3) நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு அனுமதிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்து உத்தரவிட்டனர்.

Related Stories:

>