நாடு முழுவதும் கோயில் நகைகளை கையகப்படுத்த தங்கப் பத்திரங்களை அரசு விற்கப் போவதாக பரவிய தகவல்களுக்கு ஒன்றிய நிதியமைச்சகம் மறுத்துள்ளது. கோயில் அறக்கட்டளைகள் அல்லது மத நிறுவனங்கள் வசமுள்ள நகைகளை கையகப்படுத்தி பணமாக்கும் எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை என விளக்கம் அளித்துள்ளது.
