தனியார் மயமாக்க எதிர்ப்பு எச்ஏபிபி ஊழியர்கள் நூதன போராட்டம்

திருவெறும்பூர், மார்ச் 2: மத்திய அரசு படைத்துறை தொழிற்சாலைகளை கார்பரேஷன் ஆக மாற்றுவதை ஏற்கமாட்டோம். மத்திய அரசு ஊழியர் பாதுகாப்புத்துறை ஊழியர் எனும் தகுதியை இழக்க மாட்டோம் என்ற வாசகத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள 41 படைத்துறை தொழிற்சாலை ஊழியர்கள் 78,109 பேர் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக திருவெறும்பூர் அருகே எச்ஏபிபி தொழிற்சாலையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் தொழிற்சாலைகளை கார்பரேசனாக மாற்றுவதை ஏற்க மாட்டோம். மத்திய அரசு ஊழியர் பாதுகாப்பு துறை ஊழியர் எனும் தகுதியை இழக்க மாட்டோம். இந்த வாசகத்துடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டதோடு உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் எச்ஏபிபி தொழிற்சாலையை சேர்ந்த அனைத்து ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

Related Stories:

>