செயற்கை நுண்ணறிவு குறித்த சர்வதேச இணையவழி கருத்தரங்கம்

 

மதுரை, மே 20: லிபியாவின் வாடி அல்ஷட்டி பல்கலைக்கழகம், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் மதுரை சிஇஓஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து, செயற்கை நுண்ணறிவு காலத்தில் பொறியியல் உத்திகளில் ஜியோமெட்ரியின் பயன்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் சர்வதேச இணையவழி கருத்தரங்கை நேற்று நடத்தியது. இதன் முக்கிய கருப்பொருளாக ‘தமிழ்க்கோடு – நான்கு ஒருங்கிணைவு மையங்களின் கோடு’ எனும் புதிய கணிதக் கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய ஜியோமெட்ரி கண்டுபிடிப்பை சிஇஓஏ கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தலைவர் மற்றும் கல்வியாளர் டாக்டர் எம்.ராஜா கிளைமாக்ஸ் விளக்கினார்.
நிகழ்ச்சியில் வரவேற்புரையை தொடர்ந்து, வாடி அல்ஷட்டி பல்கலைக்கழக சர்வதேச ஒத்துழைப்பு அலுவலக இயக்குநரும், இணைப் பேராசிரியருமான டாக்டர் குஸ்லான் மிஸ்கீன், உரையாளர் டாக்டர் எம்.ராஜா கிளைமாக்ஸை அறிமுகம் ெசய்து பேசினார். காந்திகிராம பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ந.பஞ்சநதம் பாராட்டுரை வழங்கினார். பின்னர், தமிழ்க்கோடு – நான்கு ஒருங்கிணைவு மையங்களின் கோடும் ஜியோமெட்ரி, பொறியியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு வழிநடத்தும் கணித ஆய்வுகளில் அதன் பயன்பாடுகளும் என்ற தலைப்பில், டாக்டர் எம்.ராஜா கிளைமாக்ஸ் தனது ஆய்வு மற்றும் புதிய கணிதக் கண்டுபிடிப்பின் பயன்பாடுகளை விளக்கினார்.

Related Stories: