மதுரை, மே 20: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மதுரை மாவட்டக் கிளை சார்பில், தமிழக முதல்வர் விஜய்க்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தில் பணிபுரியும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தைப் பணிக்காலமாகக் கணக்கிட்டு, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.
