தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல் மன்னார்குடி தொகுதியில் தேர்தல் விதிமுறை மீறிய 3 பேர் மீது வழக்குப்பதிவு

மன்னார்குடி, மார்ச் 3: மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெவ்வேறு இடங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய மூவர் மீது போலீசார் அதிரடியாக வழக்குப் பதிவு செய்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சுவரெழுத்துக்களை அழித்தல், போஸ்டர்களை கிழித்தல் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் பரவாக்கோட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட மேல திருப்பாலைக்குடி பகுதியில் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள் வைத்திருந்த அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன் (45) இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்தார். மேலும், திருமக்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட வல்லூர் பகுதியில் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள் வைத்திருந்த அதிமுக கிளை செயலாளர் தங்கவேல் (67) என்பவர் மீது எஸ்ஐ பிரபு வழக்கு பதிவு செய்தார். மேலும், மன்னார்குடி தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட கானூர் பருத்திக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள் வைத்திருந்த திமுக நிர்வாகி பாஸ்கர் (42) என்பவர் மீது எஸ்ஐ விவேகானந்தன் வழக்குப் பதிவு செய்தார்.

Related Stories: