முதுகுளத்தூரில் தலைமை காவலர்களுக்கு புலன் விசாரணை பயிற்சி

 

சாயல்குடி, மே 19: முதுகுளத்தூர் காவல் சரகத்துக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் 43 தலைமை காவலர்களுக்கு முதுகுளத்தூர் உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புலன் விசாரணை தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. முதுகுளத்தூர் டிஎஸ்பி சண்முகம் தலைமை வகித்தார். இதில் புலன் விசாரணை தொடர்பாக 173 புதிய பிஎன்எஸ்எஸ் சட்டப்படி வாக்குமூலங்களை பெற்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வது குறித்தும், 35 பிஎன்எஸ்எஸ் சட்டப்படி பிடியாணை இல்லாமல் கைது செய்யும் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது.

Related Stories: