தூத்துக்குடி, மே 19: தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், நாளை மறுதினம் (21ம் தேதி) நடக்கிறது.இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2026ம் ஆண்டு மே மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், நாளை மறுதினம் (21ம் தேதி) காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக முத்து அரங்கத்தில் நடைபெற உள்ளது.
எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
