மதுரை காந்தி மியூசியத்தில் சர்வதேச அருங்காட்சியக தினம்

 

மதுரை, மே 19: மதுரை காந்தி மியூசியத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச அருங்காட்சியக தின விழாவிற்கு, மியூசிய பொருளாளர் வழக்கறிஞர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் நந்தாராவ் மற்றும் மதுரை மீனாட்சி அரசு கல்லூரி பேராசிரியை சத்தியபாமா வாழ்த்துரை வழங்கினர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி துணை முதல்வர் கபிலன் சிறப்புரையாற்றினார். வினாடி வினா, கட்டுரை, மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மதுரை மீனாட்சி அரசு கல்லூரி வரலாற்று துறை மாணவிகளுக்கான படிப்பிடைப் பயிற்சி தொடக்க விழா நடந்தது. காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன் வரவேற்றார். இந்நிகழ்வுகளில் ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் நன்றி கூறினார். பொதுமக்கள், பேராசிரியர்கள், காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன யோகா மாணவர்கள், மியூசிய பணியாளர்கள், அமெரிக்கன், பாத்திமா, விவேகானந்தா கல்லூரிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: