விருதுநகர் அருகே பாவாலி ஊராட்சியில் டாஸ்மாக் அமைக்க எதிர்ப்பு

விருதுநகர், மார்ச் 2: விருதுநகர் அருகே பாவாலி ஊராட்சியை சேர்ந்த ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு நிர்வாகி விஜயலட்சுமி

கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பெட்டியில் கோரிக்கை மனுவை போட்டார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பாவாலி கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை ஆரம்பிக்க உள்ளனர்.

தற்போது கிராமத்தில் ஒரு வீட்டில் வைத்து மதுபாட்டில்கள் விநியோகம் செய்து வருகிறார்கள். இதனால் கிராமத்தில் உள்ள சிறுவர்கள், இளைஞர்கள், மற்றும் பெண்கள் அனைவரும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, கிராமமக்களின் பொதுநலன் கருதி, திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். அத்துடன் டாஸ்மாக் கடை அமைக்காமல் இருப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே வட்டாட்சியரிடம் தெரியப்படுத்தி உள்ளதாக கூட்டமைப்பினர் கூறியுள்ளனர்.

Related Stories:

>