திருச்செந்தூர் கோயில் அருகே கடல் 70 அடி உள்வாங்கியது

திருச்செந்தூர், மே 18: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே நேற்று கடல் சுமார் 70 அடி உள்வாங்கியது.  அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். பக்தர்கள் அதிகாலை முதல் இரவு வரை உற்சாகமாக நீராடி மகிழ்கின்றனர்.

இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவதும், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி விட்டது.நேற்று முன்தினம் அதிகாலை முதல் நேற்று அதிகாலை வரை அமாவாசை திதி இருந்தது. இதன் காரணமாக கடற்கரையிலுள்ள அய்யா கோயில் பகுதியில் நேற்று காலை சுமார் 70 அடி தூரம் கடல் உள்வாங்கியது. இதனால் பச்சை பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. கடல் உள்வாங்குவதும், வெளியேறுவதுமாக இருந்த போதிலும் பக்தர்கள் அச்சமின்றி வழக்கம் போல கடலில் நீராடினர்.

 

Related Stories: