கோவில்பட்டியில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கோவில்பட்டி, மே 18:விவசாயிகள் குறைதீர் கூட்டம் குறித்து கோவில்பட்டி சப்-கலெக்டர் ஹிமான் சூமங்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கோவில்பட்டி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் வரும் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் மே மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: