திருமங்கலம், மே 18: திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் பசுமாடு உயிரிழந்தது. கோடை காலத்தில் பொதுமக்களை வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம் காலத்தில், சில நேரங்களில் தொடர் மழை பெய்து மக்களை குளிர்ச்சிப்படுத்தும். இதன்படி இந்த ஆண்டு மதுரை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் ஆங்காங்ேக திடீர் திடீரென கோடை மழை பெய்து வருகிறது. இதற்கிடையே மழை இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும், வெயிலின் உக்கிரம் போலவே வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.
