தேர்தல் அலுவலகம் இடமாற்றம்

மதுரை, மார்ச் 2: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலகம் இடமாற்றப்பட்டது. மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதற்கான தேர்தல் அலுவலகம் அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட தாலுகா அலுவலகம் அல்லது மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகத்தில் இயங்குகிறது. மாவட்ட தேர்தல் அலுவலகம் கலெக்டர் அலுவலகத்தில் பின் பக்கத்தில் இயங்கி வந்தது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நேற்று மாவட்ட தேர்தல் அலுவலகம் மாடியில் கலெக்டர் அறைக்கு எதிரே உள்ள அரங்குக்கு மாற்றப்பட்டது. இதன் அருகே 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை, மற்ற பணிகள் தொடர்பான அலுவலகமும் இயங்க உள்ளது. இனிமேல் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் இங்கு மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: