காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய தமிழகம் முழுவதும் 162 தொழில்நுட்ப எஸ்ஐக்கள் பணியிடமாற்றம்: தொழில்நுட்ப பிரிவு டிஐஜி ஜெயலட்சுமி உத்தரவு

சென்னை: காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய 162 தொழில்நுட்ப எஸ்ஐக்கள் விருப்பத்தின் படி மற்றும் நிர்வாக வசதிக்காக பணியிடமாற்றம் செய்து தொழில்நுட்ப பிரிவு டிஐஜி ஜெயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் தொழில்நுட்ப சார்ந்த பணிகளில் எஸ்ஐக்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே இடத்தில் பணியாற்றியதால் அவர்களை நிர்வாக வசதிக்காகவும் மற்றும் எஸ்ஐக்களின் மற்ற பிரிவுகளில் செல்ல விருப்ப மனுக்களின் படி காவல்துறை தொழில்நுட்ப பிரிவு டிஐஜி ஜெயலட்சுமி 162 எஸ்ஐக்களை காவல்துறையில் உள்ள பல்வேறு பிரிவுகலுக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சிபிசிஐடி தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிய எஸ்ஐ பால ஆத்ம நேசர் சென்னை பயங்கரவாத எதிர்ப்பு படைக்கும், தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையத்தில் பணியாற்றிய இர்பான் அயாஸ் சென்னை, பயங்கரவாத எதிர்ப்பு படைக்கும், பொருளாதார குற்றப்பிரிவில் பணியாற்றிய ராபர்ட் புரூஸ் சென்னை, பயங்கரவாத எதிர்ப்பு படைக்கும், தமிழ்நாடு 3வது பட்டாலியன் வீராபுரத்தில் பணியாற்றிய கலைச்செல்வி ஆவடி மாநகர காவல்துறைக்கும், சென்னை மாநகர கிழக்கு மண்டலத்தில் பணியாற்றிய பாஸ்கர் சென்னை மாநகர வடக்கு மண்டலத்திற்கும், காவல்துறை தலைமையகத்தில் பராமரிப்பு பிரிவில் பணியாற்றி வந்த நாகராஜன் தொழில்நுட்ப பிரிவுக்கும், சென்னை பயங்கரவாத தடுப்பு பிரிவில் பணியாற்றிய அகிலன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கும், மாநில குற்ற ஆவண காப்பகத்தில் பணியாற்றிய விமலா சென்னை மாநகர மேற்கு மண்டலத்திற்கும், சென்னை வேப்பேரியில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்த கனின் நுண்ணறிவுப்பிரிவுக்கும், சென்னை கடலோர பாதுகாப்பு குழுமத்தில் பணியாற்றி வந்த தினேஷ் சந்தர் எஸ்பிசிஐடிக்கும், சென்னை கடலோர பாதுகாப்பு குழுமத்தில் பணியாற்றி வந்த ராஜராஜன் எஸ்பிசிஐடிக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்த எஸ்ஐக்கள் அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு மற்ற பிரிவுகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: