சென்னை: தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி சென்னையில் மீட்கப்பட்டுள்ளார். தந்தை உயிரிழந்த நிலையில், தாய் வேறு ஒரு நபரை திருமணம் செய்ததால் யாருடைய ஆதரவும் இன்றி தவித்த சிறுமி தனியாக சென்னைக்கு வந்துள்ளார். அந்த சிறுமி டீக்கடை ஒன்றில் அவர் வேலை கேட்ட நிலையில், கடைக்காரர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
