தேசிய அறிவியல் தின விழா

சின்னாளபட்டி, மார்ச் 2: திண்டுக்கல்- பழநி சாலையில் உள்ள எஸ்எஸ்எம் பள்ளிகளின் சார்பில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. கல்வி ஆலோசகர் சரவணன் தலைமை வகிக்க, ஒருங்கிணைப்பாளர் சரண்யா வரவேற்றார். விழாவில் ஆசிரியர் ஜெயக்குமார் ராமன் விளைவு பற்றியும், அறிவியல் தினம் கொண்டாடுவதற்கான காரணம் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மாணவர்கள் சஞ்சய், அக்சயா, சங்கீத்னா, ஹர்ஷினி, திலோத்தமை, சகரிகா ஆகியோர் ராமன் விளைவு குறித்து உரையாற்றினர். தொடர்ந்து அனைவரும் அறிவியல் உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிறைவாக ராமன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஆசிரியை அமுதலட்சுமி நன்றி கூறினார்.

Related Stories: