முக்கூடல் திமுக நிர்வாகி கொலை வழக்கு மேலும் 5 பேரை கைது செய்ய எஸ்பியிடம் உறவினர்கள் புகார்

நெல்லை, மார்ச் 2: முக்கூடல் அடுத்துள்ள வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (38). நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி செயலாளரான இவர், கடந்த 18ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிந்து பத்தல்மேட்டை சேர்ந்த உறவினரான ஐயப்பனை கைது செய்தனர். இந்நிலையில் செல்லத்துரை தாய் முத்துலட்சுமி, மனைவி பிரேமா, உறவினர் கந்தசாமி, மற்றும் திமுக வக்கீல் அணி துணை அமைப்பாளர் செல்வக்குமார், வக்கீல்கள் அரவிந்த், சிவசுப்பிரமணியன் ஆகியோர் நெல்லை எஸ்பி மணிவண்ணனிடம் புகார் மனு அளித்தனர். இதில், இவ்வழக்கில் தொடர்புடைய ராதாகிருஷ்ணன், முத்துக்குமார் உள்ளிட்ட மேலும் 5 பேரை கைது செய்ய வேண்டும். செல்லத்துரை கொலையில் அரசியல் தலையீடு உள்ளதால் பாரபட்சமின்றி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. செல்லத்துரை கொலையில் தொடர்புடைய 5 பேரை கைது செய்யாவிட்டால் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு, தேர்தல் புறக்கணிப்பிலும் ஈடுபடுவோம். வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>