திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா இலஞ்சி ஆசிரமத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி கொண்டாட்டம்

தென்காசி, மார்ச் 2: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா, தென்காசி தெற்கு மாவட்ட திமுக வக்கீல் அணி  சார்பில் இலஞ்சி ஓம் பிரணவ ஆசிரமத்தில் கொண்டாடப்பட்டது. வக்கீல் அணி  மாவட்ட அமைப்பாளர் வக்கீல் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட  பொறுப்புக்குழு உறுப்பினர் வக்கீல் ராஜா, வக்கீல் அணி  மாவட்ட துணை  அமைப்பாளர்கள் முருகன், ரகுமான்சாதத், சாகுல் ஹமீது, கண்ணன், ராஜா முன்னிலை  வகித்தனர். மாவட்டச் செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன், ஆசிரம குழந்தைகளுக்கு மதிய  உணவு வழங்கினார்.  இதில் நகரச் செயலாளர் சாதிர்,  ஒன்றியச் செயலாளர் அழகுசுந்தரம், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் கடையம்  ஜெயக்குமார், மாவட்ட அணி அமைப்பாளர்கள் பேச்சிமுத்து, குற்றாலம் குட்டி,  ஆலடி எழில்வாணன், பேரூர் செயலாளர்கள் சுடலை, மந்திரம், முத்தையா, ஜெகதீசன்,  மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் சீவநல்லூர் சாமித்துரை, கண்ணன், ஜீவானந்தம்,  சண்முகநாதன், செல்வம், சுரேஷ், ஜெயக்குமார் பாண்டியன், ரவி என்ற லட்சுமணன்,  ராமராஜ், பரமசிவன், கனகராஜ் முத்துப்பாண்டியன், மாரியப்பன் கருணாநிதி,  சுடலையாண்டி, பூவையா, கணேசமூர்த்தி, மாரியப்பன், வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>