வத்தலக்குண்டு, மே 16: வத்தலக்குண்டு அருகே கரட்டுப்பட்டியில் பிரசித்தி பெற்ற புனித விண்ணரசி தேவாலயம் உள்ளது. இங்கு முதல் நாள் கொடியேற்றத்துடன் திருப்பலி நடந்தது. திருப்பலியை பங்குத்தந்தை எட்வர்ட்ராஜ் நடத்தினார். இதனைத்தொடர்ந்து நவநாள் திருப்பலி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவிழாவினை முன்னிட்டு நேற்று விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மதியம் அசைவ அன்னதான நிகழ்ச்சி நடந்தது. அன்னதானத்தில் கரட்டுப்பட்டி, சின்னுபட்டி, மேல கோவில்பட்டி, கீழ கோவில்பட்டி உள்பட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் ஜெர்மன் ராஜா, பீட்டர், ஜீவகன், ஜீவா, கோவில் பிள்ளை போதகர் மற்றும் பலர் செய்திருந்தனர்.
