வீரவநல்லூரில் வெள்ளாஞ் செட்டியார் சமுதாய மகாசபை கூட்டம்

நெல்லை, மார்ச் 2: வீரவநல்லூர் வெள்ளாஞ் செட்டியார் சமுதாய மகாசபை கூட்டம், சுந்தர விநாயகர் கோயிலில் நடந்தது. சபை தலைவர் கோமதிநாயகம் தலைமை வகித்தார். கூட்டத்தில், 10 மற்றும் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் சமுதாய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு பரிசு வழங்க தீர்மானிக்கப்பட்டது. திருச்செந்தூரில் உள்ள சமுதாய கட்டிடத்தை புனரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று மகாசபை கூட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சண்முகம், செயலாளர் ஆவுடையப்பன், போத்திக்கண்ணு உள்பட 30 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>