குன்னம் தொகுதியில் வெற்றி பெற்ற எம்எல்ஏ சிவசங்கர் வாக்காளர்களுக்கு நன்றி

குன்னம், மே 16: குன்னம் சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சா.சி.சிவசங்கர் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து குன்னம் தொகுதியில் உள்ள திருமாந்துறை, பென்னகோணம், சு.ஆடுதுறை, ஒகளூர், அத்தியூர், லப்பைகுடிக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள வாக்காள பெருமக்களை சந்தித்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்து சா.சி.சிவசங்கர் ஆகிய என்னை வெற்றி பெற வைத்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது, மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், மருவத்தூர் ராஜேந்திரன், அழகு நீலமேகம், ஒன்றிய கவுன்சிலர் பெரு கருப்பையா, ஒகளூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

 

Related Stories: