திருமருகல் அருகே ஊர்க்காவல்படை வீரர் மின்சாரம் தாக்கி பலி

நாகப்பட்டினம், மே16: திருமருகல் அருகே சீயாத்தமங்கை ஊராட்சி கல்லுக்கேனி தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் (32). இவர் தமிழக ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வந்தார். மேலும் சீயாத்தமங்கை மெயின் ரோட்டில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் வெல்டராகவும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வெல்டிங் பட்டறையில் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது பற்றவைப்பதற்காக வெல்டிங் மிஷின் வயரில் மின் இணைப்பு கொடுப்பதற்கு சுவிட்ச் போர்டில் பொருத்தினார். அப்போது திடீரென அஜீத் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Stories: