மத்திய, மாநில இட ஒதுக்கீட்டின்படி வேலை வாய்ப்பு, கல்வியும் வழங்க வேண்டும் ஆல் இந்தியா தலித் ஆகஷன் கமிட்டி வலியுறுத்தல்

தஞ்சை, மார்ச்.2: தஞ்சையில் ஆல் இந்தியா தலித் ஆகஷன் கமிட்டியின் தஞ்சை மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேசிய பொதுச் செயலாளர் ஏ.எம்.ராஜா தலைமை வகித்தார். கூட்டத்தில்

2020-21ம் ஆண்டு மத்திய, மாநில அரசு பட்ஜெட்டில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட கோடிக்கணக்கான நிதியை முழுமையாக அம்மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செலவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் வேறு மாற்றத்திட்டங்களுக்கு செலவிட கூடாது.

மேலும் நிதியை செலவிடாமல் திருப்பி அனுப்ப கூடாது. மத்திய, மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டின்படி வேலைவாய்ப்பும், கல்வியும் இந்த ஆண்டிலாவது எஸ்.சி.,எஸ்.டி. மக்களுக்கு முழுமையாக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மார்ச் முதல் வாரத்தில் சென்னையில் கூட உள்ள மாநில செயற்குழு கூட்டத்தில் வருங்கால அரசியல் நிலைபாடு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செயலாளர் செல்வம், பொருளாளர் கலையரசன், மாவட்ட மகளிரணி செயலாளர் அம்பிகா, மாவட்ட மகளிரணி பொருளாளர் கோமதி மற்றும் இளைஞரணி, மாணவரணி, ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories:

>