தஞ்சை மாவட்டத்தில் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்

தஞ்சை, மார்ச் 2: தஞ்சை மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு 14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதற்கான உத்தரவை கலெக்டர் கோவிந்தராவ் பிறப்பித்துள்ளார். சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரிந்து வரும் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சை வட்டார வளரச்சி அலுவலர் அறிவானந்தம், அம்மாபேட்டைக்கும், அங்கிருந்த கணேசன் திருவையாறு வட்டார வளர்ச்சி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் திருவையாறு வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன், கும்பகோணத்துக்கும், கும்பகோணம் ரமேஷ்பாபு பாபநாசத்துக்கும், பாபநாசம் செல்வேந்திரன் சேதுபாவாசத்திரத்துக்கும், சேதுபாவாசத்திரம் கிருஷ்ணமூர்த்தி தஞ்சாவூர் வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜன் பேராவூரணிக்கும், பேராவூரணி சடையப்பன் திருவோணத்துக்கும், பட்டுக்கோட்டை பொய்யாமொழி பேராவூரணிக்கும், பேராவூரணி தவமணி திருவோணத்துக்கும், திருவோணம் ஜான்கென்னடி சேதுபாவாசத்திரத்துக்கும், சேதுபாவாசத்திரம் கோபாலகிருஷ்ணன் பட்டுக்கோட்டைக்கும், திருப்பனந்தாள் காந்திமதி பாபநாசத்துக்கும், பாபநாசம் சிவக்குமார் திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளதாக தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>