முதல்வர் விஜய்யின் நாகரிக சந்திப்பு பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியை தக்க வைக்கவே…: வானதி சீனிவாசன் கருத்து

 

சென்னை: பாஜ மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு கட்சித் தலைவர்களை ஜோசப் விஜய் நேரில் சந்தித்தார். ஆட்சி அமைத்த பின், தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கட்சி தலைவர்களை சந்திப்பது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில், அனைத்து முக்கிய கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்காமல், தேர்வு செய்து, குறிப்பிட்ட சிலரை மட்டுமே சந்தித்துள்ளார்.

அரசியல் களத்தில் நேர் எதிராக நிற்பவர்களையும், சித்தாந்த ரீதியாக எதிர் துருவத்தில் இருப்பவர்களையும் சந்திப்பதே அரசியல் நாகரிகம். பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியைத் தக்க வைக்கவே, இந்த ‘நாகரிக அரசியல் பயணம்’ என்ற விமர்சனத்தையும் புறந்தள்ளி விட முடியாது. ஊழல்வாதிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் புதிய கட்சியை தமிழக மக்கள் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். எனவே, ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிவிடக் கூடாது. இதை முதல்வர் ஜோசப் விஜய் உறுதி செய்ய வேண்டும்.

 

Related Stories: