டெல்லி: எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க, இனி திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிமன்றப் பணியாளர்களில் 50% பேர் சுழற்சி முறையில் வீட்டிலிருந்தே வேலை செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
