சார் தாம் யாத்திரை (Char Dham Yatra) – 1 மாதத்திற்குள் 12.62 லட்சம் பக்தர்கள் வருகை…

டேராடூன்: இந்து மக்களின் மிகவும் புனிதமான யாத்திரைகளில் ஒன்றாக கருதப்படும் ‘சார் தாம் யாத்திரை’யில் (Char Dham Yatra) பங்கேற்று வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கையில் வரலாறு காணாத அதிகரிப்பு பதிவாகி இருக்கிறது.

சார் தாம் யாத்திரை என்பது இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில், இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள நான்கு மிகவும் புனிதமான இந்து ஆலயங்களுக்குச் செல்லும் ஆன்மீகப் பயணமாகும். இந்து மதத்தின் நான்கு புனிதத் தலங்களான யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், மற்றும் பத்ரிநாத் ஆகியவற்றை சேர்ந்து தரிசிக்கும் யாத்திரையாகும். இது ஒரு வருடத்திற்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மிக முக்கிய புனித பயணமாகக் கருதப்படுகிறது.

இந்த சூழலில் கடந்த மே 14-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, இந்த புனித யாத்திரைக்கு வருகை தந்த மொத்த பக்தர்களின் எண்ணிக்கை 12.62 லட்சம் என மதிப்பிடப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் இந்த யாத்திரைக்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்து வருகின்றனர். அதிலும் ஒரே நாளில் மட்டும் சுமார் 80,000 பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

முன்னதாக கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆலயங்களின் நடை கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி திறக்கப்பட்டன; அதேவேளையில், கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆலயங்களின் நடைகள் முறையே ஏப்ரல் 22 மற்றும் ஏப்ரல் 23 ஆகிய தேதிகளில் திறக்கப்பட்டன. இந்த யாத்திரைக்கு பகதர்கள் கூட்டம் கூட்டமாக படைத்துயெடுத்து வருவதால் தினசரி பக்தர்கள் வருகை எண்ணிக்கை சுமார் 70,000 முதல் 80,000 வரை இருப்பதாக யாத்திரை குழு தகவல் தெரிவித்து உள்ளது. நவம்பர் மாதம் வரை இந்த யாத்திரையை மேற்கொள்ள முடியும் என்பதால் கடந்த ஆண்டு பதிவான 50 லட்சம் பக்தர்கள் வருகையை விட இந்த ஆண்டு அதிக பக்தர்கள் வருகை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Stories: