ஊட்டியில் பனி காற்று வீசியதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஊட்டி, மார்ச் 2: ஊட்டியில் நேற்று பகல் நேரங்களில் வெயில் அடித்த போதிலும், குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் இறுதி வரை பனிப்பொழிவு காணப்படும். சமயங்களில் குளிரின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும். அதேசமயம் பிப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் பணி பொலிவு குறைந்து காணப்படும். குளிரும் சற்று குறைந்து காணப்படும். மார்ச் மாதம் முதல் வாரத்திற்கு மேல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும். ஆனால், இம்முறை பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்ட போதிலும், குளிர் அதிகமாகவே காணப்பட்டது. கடந்த 2 நாட்களாக பகல் நேரங்களில் வெயில் அதிகமாக காணப்பட்ட போதிலும், பனி காற்று வீசி வருகிறது. குறிப்பாக ஊட்டி, பைகாரா போன்ற பகுதிகளில் பனி காற்றின் வேகம் சற்று அதிகமாக காணப்பட்டது. இதனால், பகல் நேரங்களில் குளிர் அதிகரித்ததால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். பொதுவாக மார்ச் மாதம் துவக்கம் முதல் பணியின் தாக்கம் குறைந்து காணப்படும். ஆனால், தொடர்ந்து நீர் பணி காணப்படுவதால் அதிகாலை நேரங்களில் குளிர் அதிகமாக நிலவுகிறது.

Related Stories: