திருத்துறைப்பூண்டி, மே14: திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு மின் இணைப்பு வழங்கி திறக்கப்படடுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் எழிலூர் ஊராட்சியில் 2024-2025 அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் ரூ.29 லட்சம் 81 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு கடந்த 8 மாதங்களுக்கு மேலாக ஆகிறது.
மேலும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில் இந்த கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்கவில்லை. உடனடியாக மின் இணைப்பு வழங்கி புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
