திருவையாறு, மே 13: திருவையாறு அடுத்த திருப்பழனம் மெயின்ரோடு துவாரகாபுரி நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் பாஸ்கர் (52). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி வள்ளி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர் நேற்று வீட்டிலிருந்து நடந்து சென்று திங்களூர் ஆர்ச் பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது கும்பகோணத்திலிருந்து திருவையாறு நோக்கி எதிரே வந்த பால் வேன், பாஸ்கர் மீது மோதி உள்ளது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, சப்இன்ஸ்பெக்டர் உதயச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
